Home
You Are Here: Home » News » World (Page 2)

உலகக் கோப்பை கால்பந்து போட்டி – தொடக்க ஆட்டத்தில் பிரேசில் அணி வெற்றி

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நள்ளிரவு நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் மூன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றி பெற்றது. இந்த ஆண்டிற்கான உலக கோப்பை கால்பந்து போட்டியின் முதல் ஆட்டம் நள்ளிரவில் நடைபெற்றது. இதில் பிரேசில் மற்றும் குரோஷிய அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய பதினோராவது நிமிடத்தில் குரோஷியாவின் நிக்கிக்கா ஜெலாவிக், அடித்த பந்தை தடுக்க முயன்ற பிரேசில் வீரர் மார்சிலோ சரியான சமயத்தில் தனது ...

Read more

உலக கோப்பை கால்பந்து திருவிழா

உலக கோப்பையை வெல்லும் அணிக்கு 210 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. கடந்த முறை உலக கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு வழங்கப்பட்ட பரிசு தொகையை விட இது 17 சதவீதம் கூடுதலாகும். உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 12-ந் தேதி பிரேசிலில் தொடங்குகிறது. ஜூலை 13-ந் தேதி வரை ஒருமாதம் இந்த கால்பந்து திருவிழா அங்குள்ள 12 நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில், நடப்பு சாம்ப ...

Read more

கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் – 23 பேர் பலி

கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்ட நிலையில்‌, மீண்டும் இன்று காலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது அங்கு பதற்றதை ஏற்படுத்தியுள்ளது. கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்தின் பழைய முனையத்தை நேற்றிரவு தீவிரவாதிகள் சிலர் கைப்பற்றினர். தீவிரவாதிகள் அனைவரும் விமானநிலைய பாதுகாப்புப் படையினர் போல் உடையணிந்து திடீரென சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். இதைய ...

Read more

வடக்கு மாகாணத்தில் போலீஸ் அதிகாரங்கள் தவிர்த்து மற்ற அதிகாரங்கள் வழங்க இலங்கை அரசு முடிவு

உலக நாடுகளின் கண்டனத்தை தொடர்ந்து தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் போலீஸ் அதிகாரங்களை தவிர்த்து மற்ற அதிகாரங்கள் வழங்க தயாராக இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து 5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தி விக்னேஸ்வரன் தலைமையிலான மாகாண கவுன்சில் அரசு பதவி ஏற்றுள்ளது. ஆனால், இன்னும் அரசியல் சட்டத்தின் 13ஏ திருத்தம் வழங்கியுள்ள அதிகாரங்கள் முழுமை ...

Read more

பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் – இன்று மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி

பிரெஞ்ச ஒபன் டென்னிஸ் போட்டியின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இதில் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்ல ரஷ்ய விராங்கனை மரியஷரபோவாவும், சிமோனா ஹலப்பும் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதிப்போட்டி நடைபெற்றது இதில் ரஷய வீராங்கனை மரிய ஷரபோவாவும்,யூஜின் புஜ்ஜார்டும் மோதினர். இதில் ஷர ...

Read more

தமிழர்கள் வசிக்கும் மாகாணங்களுக்கு போலீஸ் அதிகாரம் வழங்க முடியாது – இலங்கை அரசு திட்டவட்டம்

தமிழர்கள் வசிக்கும் மாகாணங்களுக்கு போலீஸ் அதிகாரம் வழங்க முடியாது என்று இலங்கை அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்தியா-இலங்கை இடையே 1987-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, அரசியல் சட்டத்தில் 13-வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. மாகாணங்களுக்கு போலீஸ் அதிகாரம், நில அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க இத்திருத்தம் வகை செய்கிறது. இதன் மூலம், தமிழர்-சிங்களர் இடையிலான பதற்றம் தணியும் என்று கருதப்ப ...

Read more

ஆப்கானிஸ்தானில் தமிழக இளைஞர் கடத்தல்

ஆப்கானிஸ்தானில் இந்தியத் தூதரகம் மீது தாக்குதல் நடைபெற்ற சில தினங்களுக்குள் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நேற்று‌ கடத்திச் சென்று‌ள்ளனர். ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவன ஊழியர் பிரேம்குமார் என்பவர் அங்குள்ள கல்வி அறக்கட்டளை ஒன்றில் பணியாற்றி வந்தார். அவரை நேற்று‌ மதியம் ஆயுதம் ஏந்திய அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று கடத்திச் சென்றதாக அந்நாட்டு உய ...

Read more

நைஜீரியாவில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் – 40 பேர் பலி

நைஜீரியா கால்பந்து மைதானத்தில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு விபத்தில் 40 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக கூறப்படுகிறது‌. வடகிழக்கு நைஜீரியாவின் முபி நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் நேற்று நடந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியபோது, திடீரென்று அந்த மைதானத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. பீதியடைந்த மக்கள் உயிர் பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த ...

Read more

7 வது‌ ஐபிஎல் போட்டி – கோல்கத்தா அணி சாம்பியன்

7 வது‌ ஐபிஎல் இறு‌தி போட்டியில் கோல்கத்தா அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி, 2 வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது‌. பெங்களூரில் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கிய ஐபிஎல் இறு‌தி போட்டியில், பஞ்சாப்பும், கொல்கத்தாவும் மோதின. முன்னதாக டாஸ் வென்ற கோல்கத்தா அணி,முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இதை அடுத்து பேட்டிங் செய்யக் களமிறங்கிய பஞ்சாப் அணியில், சேவாக் ...

Read more

உலகக் கோப்பை ஹாக்கி போட்டி – இந்திய அணி போராடி தோல்வி

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் பெல்ஜியத்திடம் 3 க்கு 2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் சர்தார் சிங் தலைமையிலான இந்திய அணி குரூப் ஏ பிரிவில் உள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவும், பெல்ஜியமும் மோதின. பெல்ஜியத்தின் வேன் அபெல் ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதற்கு இந் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top