Home
You Are Here: Home » News » India (Page 6)

பிரதமர் நரேந்திரமோடி நாளை பூடான் பயணம்

பிரதமராக பதவியேற்ற நரேந்திரமோடி, தமது முதல் வெளிநாட்டுப் பயணமாக நாளை பூடான் செல்ல உள்ளார். இந்தியாவின் நீண்டகால நெருங்கிய நட்பு நாடான பூடானில், அண்மைக் காலமாக சீனா தனது செல்வாக்கை அதிகரிக்க முழுவீச்சில் முயற்சி செய்துவரும் நிலையில், தனது முதல் வெளிநாட்டுப் பயணத்துக்கு பூடானை மோடி தேர்ந்தெடுத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. அந்நாட்டில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடி, பூடான் மன்னர் ஜக்மே வா ...

Read more

சீமாந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க இயலாது – மத்திய திட்டக் குழு

தேசிய வளர்ச்சிக் கவுன்சில் வகுத்துள்ள விதிமுறைகளை பூர்த்தி செய்யாத காரணத்தால் சீமாந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க இயலாது என்று மத்திய திட்டக் குழு தெரிவித்துள்ளது. தெலங்கானா தனி மாநிலமாக பிரித்த பிறகு எஞ்சியுள்ள சீமாந்திரா மாநிலத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவையில் அறிவித்திருந்தார். இதற்கான நடவடிக்கையை மத்திய திட்டக் குழு எடுக ...

Read more

நெஸ் வாடியா மீது பிரித்தி ஜிந்தா பாலியல் புகார்

பஞ்சாப் ஐ.பி.எல்., அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா மீது, பஞ்சாப் அணியின் உரிமையாளரும், பிரபல நடிகையுமான பிரித்தி ஜிந்தா பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்‌பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல பாலிவுட் நடிகை பிரீத்திஜிந்தா, உயிரே என்ற தமிழ் சினிமாவிலும் நடித்துள்ளார். . கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளராக இருந்து வரும் இவரும், அந்த அணியின் பங்குதாரரும், பிரபல தொழிலதிபருமான நெஸ்வாட ...

Read more

பிரதமருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் அரசியல் உள்நோக்கம் கொண்டது – சித்தராமையா

காவிரி பிரச்சனை குறி்த்து பிரதமருக்கு ஜெயலலிதாவின் எழுதிய கடிதம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், இதில் தமது மாநிலத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும், கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றார். காவி ...

Read more

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில், எல்லை கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்‍. இந்திய எல்லைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் எதிர் தாக்குதல் மேற்கொண்டதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ...

Read more

ஆந்திர கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 2 ரூபாய்க்கு 20 லிட்டர் குடிநீர் கேன் வழங்கப்படும் – சந்திரபாபு நாயுடு

ஆந்திர கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 2 ரூபாய்க்கு 20 லிட்டர் குடிநீர் கேன் வழங்கப்படும் என சீமாந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.. புதிய ஆந்திர முதலமைச்சராக பதவி ஏற்ற சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் அமைச்சர்களுக்கான இலாகாவை ஒதுக்கினார். இதன்பின் அமைச்சரவையின் முதல் கூட்டம் விசாகப்பட்டினத்தில் நடந்தது. சுமார் 7 மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறி ...

Read more

எம்.பி கள் மீது‌ சிபிஐ வழக்குப்பதிவு

முன்னாள் மற்று‌ம் இந்நாள் மாநிலங்களவை உறு‌ப்பினர்கள் 6 பேர் மீது‌ சிபிஐ வழக்குப்பதிவு செய்து‌, அவர்களுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனையும் நடத்தி வருகிறது‌. மாநிலங்களவை எம்.பி.யாக இருப்பவர்களுக்கு விமானம், ரயில், பேருந்து ‌என்று ‌போக்குவரத்து‌ சலு‌கைகள் வழங்கப்படுவது‌ வழக்கம். அதன்படி, அவர்களுக்கான விடுப்பு கால பயண சலு‌கைகளை முறைகேடாகவும், தவறாகவும் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது‌. கடந்தாண்டு ...

Read more

உத்தரப் பிரதேச பாலியல் பலாத்காரம் – சிபிஐ வழக்குப் பதிவு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தலித் சகோதரிகள் இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ நேற்று வழக்குப் பதிவு செய்தது. உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூனில் மே 27ஆம் தேதி காணாமல் போன தலித் சகோதரிகள் 2 பேர், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். அவர்களின் சடலங்கள் உசைத் என்ற பகுதியில் மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது உத ...

Read more

எல்லையில் சாலைகளை மேம்படுத்த மத்திய அரசு தீவிரம்

சீனாவுடனான எல்லையில் சாலைகளை மேம்படுத்த மோடி தலைமையிலான மத்திய அரசு மிகவும் தீவிரமாக உள்ளது. இதற்கு தடையாக உள்ள சுற்றுச்சூழல் அனுமதி குறித்து உடனடியாக முடிவெடுக்கும் படி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீனா, இந்தியாவுடனான தனது எல்லையில் சாலை வசதிகளை மேம்படுத்தியதுடன், எல்லைக்கு அருகே ரயில் பாதைகளை அமைக்கும் பணிக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்தியாவுடன் போர் ஏற்படும் பட்சத்தில், போர் கர ...

Read more

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மேலும் இரண்டு மாணவர்களின் சடலங்கள் மீட்பு

இமாச்சல் பிரதேசத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மேலும் இரண்டு மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.. ஐதராபாத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் 48 மாணவ, மாணவிகள், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குலு-மணாலிக்கு கடந்த 8ம் தேதி கல்வி சுற்றுலா சென்றனர். அப்போது அவர்கள் மாண்டி மாவட்டத்தில் உள்ள பியாஸ் ஆற்றங்கரையில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top