Home
You Are Here: Home » News » India (Page 4)

ரஷ்ய துணை பிரதமர் டிமித்ரி ஓ ரோகோசின் இந்தியா வருகை

இருநாட்கள் பயணமாக ரஷ்ய துணை பிரதமர் டிமித்ரி ஓ ரோகோசின் இன்று இந்தியா வருகிறார். மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தது முதல் பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் வகையில், ரஷ்ய துணை பிரதமர் டிமித்ரி ஓ ரோகோசின் இன்று இந்தியா வருகிறார். இருதரப்பு உறவை மேம்படுத்தும் விதமாக முதலில் அவர், வெளியுறவ ...

Read more

ரயில் கட்டண உயர்வுக்கு பிரதமர் எதிர்ப்பு

ரயில் கட்டணங்களை உயர்த்தும் மத்திய ரயில்வே அமைச்சரின் முடிவுக்கு பிரதமர் நரேந்திரமோடி எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய ரயில்வே திட்டங்களுக்கான செலவில் பாதியை மாநில அரசுகள் ஏற்பதோடு, திட்டங்களுக்கான நிலங்களையும் இலவசமாக வழங்க வேண்டும் என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் சதானந்த கவுடா வலியுறுத்தி இருந்தார். மேலும், ரயில்வே துறைக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை ...

Read more

வரி பயங்கரவாதத்தில் நரேந்திரமோடி அரசு ஈடுபடாது – நிர்மலா சீத்தாராமன்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசைப்போல வரி பயங்கரவாதத்தில் நரேந்திரமோடி அரசு ஈடுபடாது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார். டெல்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சரியான ஆலோசனைகளை கொடுத்து பிரச்னைகளுக்கு தீர்வு காணவே மோடி அரசு வலியுறுத்தும் என்றும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு போல் வரி பயங்கரவாதத்தில் பாஜக ஈடுபடாத ...

Read more

முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு தள்ளுபடி

சொத்து குவிப்பு வழக்கை தடை செய்யக்கோரி முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பெங்களுர் தனி நீதிமன்றத்தில் நடைபெறும் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடைய லெக்ஸ் பிராபர்ட்டீஸ் நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கியதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் தொடர்பான வழக்கை சிறப்பு நீத ...

Read more

ஆளுனர்களை மாற்ற பா.ஜ.க அரசு முடிவு

பா.ஜ.க தலைமையிலான நரேந்திரமோடியின் அரசு, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முந்தைய ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஆளுனர்களை மாற்றுவது என முடிவு செய்துள்ளது. குறிப்பாக கேரளா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களின் ஆளுநர்களை மாற்ற வாய்ப்பு உள்ளதாக தெரிய வருகிறது‌. உத்தர பிரதேசத்தில் பி ஜோஷி, கேரளாவில் ஷீலா தீட்சித், பஞ்சாபில் சிவராஜ் பட்டேல், மத்திய பிரதேசத்தில் ராம் நரேஷ் ...

Read more

ரெயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொறு‌த்தப்படும் – ரயில்வே து‌றை அறிவிப்பு

பயணிகளின் பாதுகாப்புக்காக ரெயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொறு‌த்தப்படும் என்று‌ ரயில்வே து‌றை அறிவித்து‌ள்ளது‌. நாடு முழுவதும் கோடிக்கணக்கான பொதுமக்கள் தினந்தோறும் ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர். அந்தவகையில் ஏழை, நடுத்தர மக்கள் மட்டுமின்றி செல்வந்தர்களும் ரெயில் போக்குவரத்தை பெரிதும் விரும்புகிறார்கள். ஆனால் சமீப காலங்களில் ரெயில் பயணம் பாதுகாப்பற்றதாக மாறி வருகிறது. குறிப்பாக ரெய ...

Read more

மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணம் குறித்து – சிபிஐ விசாரணை தொடங்கியது

மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே சாலை விபத்தில் மரணமடைந்தது தொடர்பாக சிபிஐ தனது விசாரணையை தொடங்கி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக பதவி ஏற்றவர் கோபிநாத் முண்டே. பதவி ஏற்ற 10 நாளில் கடந்த 3ம் தேதி டெல்லி விமான நிலையம் அருகே நடந்த கார் விபத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்துக்கு காரணமான தனியார் கார் டிரைவர் குர்விந்த ...

Read more

நாட்டின் பண வீக்கம் அதிகரிப்பு

முந்தைய மாதங்களில் 5.20 சதவிகிதமாக இருந்த நாட்டின் பண வீக்கம், மே மாதத்தில் 6.01 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீன், காய்கறிகள், பழங்கள், இறைச்சி,காபி, தேநீர் போன்ற உணவுப் பொருட்களின் விலையுயர்வு காரணமாக கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் உணவுப் பொருட்களின் விலையை வைத்து கணிக்கப்பட்ட பணவீக்கம் 4.58 சதவிகிதமாக இர ...

Read more

புதிய ரயில்வே திட்டங்களுக்கான நிலங்களை மாநில அரசுகள் இலவசமாக வழங்க வேண்டும் – அமைச்சர் சதானந்த கவுடா

புதிய ரயில்வே திட்டங்களுக்கான செலவில் பாதியை மாநில அரசுகள் ஏற்பதோடு, திட்டங்களுக்கான நிலங்களையும் இலவசமாக வழங்க வேண்டும் என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் சதானந்த கவுடா வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் பேசிய அவர், வரும் பட்ஜெட்டில் ரயில்களின் பாதுகாப்பை அதிகரிப்பது, சிறப்பான சேவையை அளிப்பது மற்றும் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது ஆகியவை தொடர்பாக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தற்போதைய ...

Read more

முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை

சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க கோரி முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகின்றது. முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் உள்ளிட்ட 33 நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தங்களை வழக்கிலிருந்து விடுவிக்க கோரி லெக்ஸ் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் மனு தாக்கல் செய்துள்ளன. இதில் லெக்ஸ் நிறுவனத்தின் மனு மீது 18-ந் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top