Home
You Are Here: Home » News (Page 552)

அரசு பதிவேட்டில் இருந்து மாயமான கிராமம்

திருவாரூர் மாவட்டத்தில், அரசு பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்ட கிராமத்தின் பெயரை மீணடும் சேர்க்கக் கோரி, கடந்த 20 ஆண்டுகளாக, மக்கள் போராடி வரும் அவல நிலை நீடித்து வருகிறது. பூந்தோட்டம் அருகே உள்ள கிராமம், பண்டாரவாடை திருமாளம். கடந்த 1990ம் ஆண்டு, எந்த வித முன்னறிவிப்பும் இன்றி, இந்த கிராமத்தின் பெயர், அரசு பதிவேட்டில் இருந்து மாயமானது. இங்குள்ளவர்களின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்டவைக ...

Read more

தேர்ச்சி சான்று வழங்காத கல்லூரி நிர்வாகம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தேர்வு எழுதி 2 ஆண்டுகள் ஆன பின்பும் தேர்ச்சி சன்றிதழ் வழங்காத ஆசிரியர் பயிற்சி கல்லூரியை கண்டித்து தேர்வு எழுதியவர்கள் போராட்டம் நடத்தினர். தாராபுரம் அடுத்துள்ள மணக்கடவுவில் இயங்கி வரும் அன்னை பாத்திமா ஆசிரியர் பயிற்சி நிலையத்தில்தான் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2009-10கல்வியாண்டில் அங்கு 98பேர் பயின்று தேர்வு எழுதியுள்ளனர். இன்று வரை மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றி ...

Read more

இரட்டிப்பு பணம் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே, இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். கெங்கவல்லியை அடுதத வீரகனூரில் உள்ள ரெப்ரசன்டேடிவ் என்ற தனியார் நிறுவனம், தங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் ஆண்டு முடிவில் 2 ல்ட்சம் தருவதாக விளம்பரம் செய்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை நம்பிய பலர், அந்த நிறுவனத்த ...

Read more

சென்னையில் கணவனை கொலை செய்த மனைவி

சென்னையில், கணவனைக் கொலை‌ செய்து, உடலை‌ துண்டு துண்டாக வெட்டி, எரித்துக் கொண்டிருந்த மனைவியும், உடந்தையாய் இருந்த மகனும் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, மணலியில் உள்ள குப்பைக்கிடங்கில், சந்தேகத்திற்கிடமான வகையில் இருவர், ஏதோ பொருட்களை எரித்துக் கொண்டிருந்ததைக் கண்ட அந்த பகுதி மக்கள், காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர், து ...

Read more

வருகிற 18ந் தேதி என்.எல்.சி.அலுவலக முற்றுகைப் போராட்டம்

ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யும் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை கண்டித்து, வருகிற 18ந் தேதி, என்.எல்.சி. சுரங்க நிர்வாக அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் பேரவை அறிவித்துள்ளது. நெய்வேலியில் நடைபெற்ற பேரவை ஆலோசன்க் கூட்டத்திற்கு பின் பேசிய ஏ.ஐ.டி.யு.சி.மாவட்ட செயலாளர் சேகர் இதனை தெரிவிததார். கடந்த ஜுன் மாதம், என்.எல்.சி.நிறுவனம், தொழிலாளர்கள் மற்றும் த ...

Read more

மொடி பாதுகாப்புக்கு சென்ற வேன் விபத்து

குஜராத் மாநிலத்தில், போலீசார் பயணித்த வேன் ஒன்று, சாலையோர கிணற்றில் விழுந்ததில், ஆறு பெண்கள் உட்பட, 11 போலீசார் உயிரிழந்துள்ளனர்‍. பலியாயினர்.குஜராத்தின் தாகோத் மாவட்டம், ஜாலோத் தாலுகாவில், மாநில முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்ற, தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்ட பாதுகாப்புப் பணியில் பங்கேற்ற பின், போலீசார், 15 பேர், வேன் ஒன்றில், தாகோத் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.அப்போது, வேனை ...

Read more

இன்று இறுதி கட்ட பிரசாரம்

அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் வாக்குசேகரிப்புக்கிடையில் குஜராத் சட்ட மன்றத்திற்கான இறுதி கட்ட பிரசாரம் இன்று ஓய்கிறது குஜராத் பேரவை தேர்தலில் சோனியா காந்தி, நரேந்திர மோடியின் அனல் பறக்கும் பேச்சுகளால் உச்ச கட்டத்தை அடைந்துள்ள பிரசாரம் இன்று மாலையுடன் முடிகிறது. குஜராத் சட்டப் பேரவையின் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 87 இடங்களுக்கு நேற்று முன்தினம் முதல் கட்ட தேர்தல் நடந்தது. 2வது கட்டமாக மீதியுள்ள தொகுதிகளு ...

Read more

இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் குற்றச்சாட்டு

இந்தியா, சக்தி மிக்க நாடாக மாறுவதை விரும்பாதவர்கள்தான், கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக, இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கடாகின் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற ஒரு கலாச்சார விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், கூடன்குளம் அணு மின் நிலையத்தில், முதல் அணு உலை மின உற்பத்திக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார். அடுத்த 6 மாதத்துக்குள், 2 வது அணு உலையும் செயல்படத் தொடங்கும் ...

Read more

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் உள்ள பள்ளி ஒன்றில் புகுந்த மர்மமனிதன் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 18 பள்ளிக்குழந்தைகள் உள்ளிட்ட 27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்னதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் உள்ளா கனெக்டிகட் மாகாணத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள சான்டி ஹூக் என்ற தொடக்கப்பள்ளியில் புகுந்த 24 வயது இளைஞர் ஒருவர் கண்மூடிதனமாக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார்‍. இதில் ஐந்து முதல் பத்து ...

Read more

கல்லூரி இயக்குநரைக் கைது செய்ய கோரிக்கை

பாலியல் புகாரில் சிக்கியுள்ள கும்பகோணம் செவிலியர் கல்லூரி இயக்குநரைக் கைது செய்ய வலியுறுத்தி மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் காரணமாக கும்பகோணம் காரரைக்கால் சாலையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசாரை மாணவிகளின் பெற்றோர்கள், முற்றுகையிட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டனர்‍. சென்னை உயர்நீதி ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top