Home
You Are Here: Home » News

முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையில், 29 புதிய அமைச்சர்கள் இன்று‌ பதவியேற்று‌க்கொண்டனர்

கர்நாடக அமைச்சரவை இன்று‌ விரிவுபடுத்தப்பட்டது‌. முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையில், 29 புதிய அமைச்சர்கள் இன்று‌ பதவியேற்று‌க்கொண்டனர். கடந்த 13-ம் தேதி சித்தராமைய்யா பதவியேற்ற நிலையில், உள்கட்சி பூசலையும், கோஷ்டி சண்டையும் தடுப்பதற்காக புதிய அமைச்சர்களாக யாரை நியமிப்பது‌ என்பது‌ குறித்து‌ சோனியாகாந்தியுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்தார். அதன்படி, 29 அமைச்சர்களின் பட்டியலை ஆளுநர் பரத்வாஜிடம் நேற்று‌ வழங்கினா ...

Read more

இன்றைய ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ்லெவன் பஞ்சாப்-மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூரு-சென்னை அணிகளும் பலப்பரிட்சை நடத்து‌கின்றன.

6-வது‌ ஐபிஎல் போட்டியில் இன்று‌ இரண்டு ஆட்டங்கள் நடைபெறு‌கின்றன. அதன்படி, இன்று‌ பிற்பகல் 4 மணிக்கு தர்மசாலாவில் நடைபெறு‌ம் ஒரு ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோது‌கின்றன. கிங்ஸ் அணி லெவன் அணியைப் பொருத்தவரை, அந்த அணி ஆடிய 15 ஆட்டங்களில் 7-ல் வெற்றியும், 8-ல் தோல்வியும் அடைந்து‌ 14 புள்ளிகளுடன், ஐபிஎல் பட்டியலில் 6-வது‌ இடத்தில் உள்ளது‌. மும்பை இந்தியன்ஸ் அணி, 15 போட்டிகள ...

Read more

பிரதமர் மன்மோகன்சிங், அதிபர் ஒபாமாவின் அழைப்பை ஏற்று‌ விரைவில் அமெரிக்கா செல்வார் என தகவல்

பிரதமர் மன்மோகன்சிங், அதிபர் ஒபாமாவின் அழைப்பை ஏற்று‌ விரைவில் அமெரிக்கா செல்வார் என தகவல் வெளியாகியுள்ளது‌. அமெரிக்க அதிபராக இரண்டாவது‌ முறை வெற்றி பெற்று‌ள்ள ஒபாமா, இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை அமெரிக்கா வருமாறு‌ அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, அமெரிக்காவின் து‌ணை செயலாளர் வில்லியம் இந்தியா வந்தபோது‌, பிரதமருக்கு ஒபாமாவின் அழைப்புக்கடிதத்தை வழங்கினார். அந்தக்கடிதத்தை பெற்று‌க்கொண்ட பிரதமர், அமெரிக்க வ ...

Read more

இந்திய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, கால்வாயில் வீசி எறிந்த கொடூரனுக்கு, 45 ஆண்டு சிறை தண்டனை

ஆஸ்திரேலியாவில், இந்திய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, கால்வாயில் வீசி எறிந்த கொடூரனுக்கு, 45 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தங்கி படித்தவர் டோஷா தாக்கர். 24 வயதான இவரது பக்கத்து வீட்டில் வசித்தவன், டேனியல் ஸ்டேனி ரெஜினால்டு. கடந்த, 2011ல், டோஷாவை பாலியல் பலாத்காரம் செய்த டேனியல், அந்த மாணவியை, மின் ஒயரால் கழுத்தை நெரித்து கொன்று சூட்கேசில் வைத்து, கால்வாயில் வீசியு ...

Read more

தமிழ் ஈழ இன அழிப்பின் 4-ம் ஆண்டை நினைவு கூரும் வகையில் வரும் 19-ம் தேதி போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் நினைவஞ்சலி செலுத்த மே 17 இயக்கம் அழைப்பு

தமிழ் ஈழ இன அழிப்பின் 4-ம் ஆண்டை நினைவு கூரும் வகையில் வரும் 19-ம் தேதி போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் நினைவஞ்சலி செலுத்த மே 17 இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. ஈழத்தில் 2009 ஆண்டு நடந்தேறிய தமிழினப் படுகொலையை நினைவு கூரும் வகையில் தமிழினப் படுகொலைக்கான நினைவேந்தல் நாளை பெரும் எழுச்சியுடன் கடைபிடிக்க மே 17 இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. வருகின்ற மே 19 தேதி மெரினா கடற்கரையின் கண்ணகி சிலையருகே தமிழ் மக்களை அண ...

Read more

கர்நாடகத்தில் முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையிலான அரசில் 25 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சித்தராமையா கடந்த 13ம் தேதி முதல்வராக பதவி ஏற்றார். இதைத் தொடர்ந்து, புதிய அமைச்சர்களாக யார், யாரை நியமிப்பது என்பது குறித்து முடிவு செய்ய கட்சி தலைவர் சோனியா காந்தியை சந்திக்க முதல்வர் சித்தராமையா டெல்லி சென்றார். சோனியாவுடன் ஆலோசித்து புதிய அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்தார். பிரதமர் மன்மோகன்சிங் ...

Read more

ராஜஸ்தான் அணியை 23 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி அபார வெற்றி

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியை 23 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்தது. துவக்க ஆட்டக்காரர்கள் படேல், தவான் இருவரும் 2 ரன்னும் 1 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். வைட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். விஹாரி 19 ரன் எடுத்தார். ஆனாலும் நடுவரிசையில் சமண்ட்ரே 46 பந ...

Read more

குடிநீர் கேன் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ,குடிநீர் கேன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட குடிநீர் கேன் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குடிநீர் கேன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சீல் வைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து‌ மினரல் வாட்டர் தயாரிப்பவர்கள் உற்பத்தியை நிறு‌த்தியுள்ளதால், சென்னை மற்று‌ம் அதன் சுற்று‌வட்டார பகுதியில் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டு்ள்ளது. இதனால் சென்னை, காஞ்சி ...

Read more

இரண்டு ஆண்டுகளில் விலைவாசி விண்ணை முட்டுகின்ற அளவிற்கு உயர்ந்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டி உள்ளார்

அதிமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் விலைவாசி விண்ணை முட்டுகின்ற அளவிற்கு உயர்ந்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2013 -2014 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரை அதிமுக ஆட்சியின் 2 ஆண்டுகள் முடிவடைகின்ற நாள் வரை நீடிக்க செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் தற்போது, விலைவாசி விண்ணை முட் ...

Read more

இந்திய கிரிக்கெட் வாரிய அவசர செயற்குழு, சென்னையில் நாளை கூடுகின்றது

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் உள்ளிட்ட‌ 3 வீரர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்க இந்திய கிரிக்கெட் வாரிய அவசர செயற்குழு, சென்னையில் நாளை கூடுகின்றது. இதில் அதன் தலைவர் என்.சீனிவாசன் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் பங்கே‌ற்கின்றனர். ஐ.பி.எல். சூதாட்ட பிரச்சினை மற்றும், வருங்காலத்தில் அதனை முற்றிலும் தடுக்க எடுக்க வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதித்து முடிவு செய்யப்பட இருப்பதாக கி ...

Read more

© 2013 Captain Media Pvt Ltd

Scroll to top